• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேலை நிறுத்தம் எதிரொலி – கோவையில் 95 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை என தகவல்

March 28, 2022 தண்டோரா குழு

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் 95 சதவீதம் பேருந்துகள் இயங்கவில்லை என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதனால் வங்கி, போக்குவரத்து சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் தடைபட்டுள்ளன. கோவையை பொறுத்தவரை வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 95 சதவீத அரசு பேருந்துகள் இயங்கவில்லை. பேருந்துகள் அனைத்தும் அந்தந்த டிப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் காலை நேரத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்லும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இயங்கும் ஒரு சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி அதிக அளவில் பயணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க