• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாசாவின் பாராட்டை பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியர் நேரில் பாராட்டு

March 25, 2022 தண்டோரா குழு

கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரமீஷா, சுவேதா ஆகிய மாணவிகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.இவர்கள் குறுங்கோள் கண்டறியும் முகாமில் பங்கு கொண்டு புதிய குறுங்கோள்களை கண்டறிவதில் ஆற்றிய பங்கினை பாராட்டி,விஞ்ஞான் பிரசார் மூலம் நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றுள்ளனர்.

கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை நடைபெற்ற இம்முகாம், அறிவியல் பலகை,திருச்சி ஆஸ்ட்ரோ கிளப், தமிழ்நாடு ஆஸ்ட்ரோநாமிக்கல் சயின்ஸ் சொசைட்டி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

இம்மாணவியர் கோவை ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் இம்முகாமில் பங்கு பெற்றனர். நாசா மூலம் வழங்கப்பட்ட செயலி மூலம் 21 குறுங்கோள்களை இம்மாணவியரின் குழு கண்டறிந்து உள்ளது.இதனை நாசா அங்கீகரித்துள்ளது.மாணவியரின் இம்முயற்சியை பாரட்டும் பொருட்டு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மாணவியரை நேரில் சந்தித்து பாராட்டினார்.மாணவியர் தாங்கள் செயல்பட்ட விதத்தை கலெக்டரிடம் விளக்கி கூறினர்.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ், கோவை ஆஸ்ட்ரோ கிளப் செயலாளர் சாய்லட்சுமி,ஆசிரியர்கள் மங்கையர்கரசி, நாகராஜ், கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க