நாட்டிலேயே பக்கவாத நோய்க்கு அதிவிரைவு சிகிச்சை வழங்குவதை ஊக்குவிக்கும் விதமாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு உலக பக்கவாத அமைப்பின் ஏஞ்சல் விருது வழங்கப்பட்டுள்ளது.
பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாகவும், விரைவாகவும் உரிய சிகிச்சை அளிப்பது அவசியம்.இந்நிலையில் இது போன்று பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் பல்வேறு அதி நவீன சிகிச்சை வசதிகளுடன் கே.எம்.சி.எச்.மருத்துவமனை முதன்மையாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில்,பக்கவாதத்திற்கு கே.எம்.சி.எச் மருத்துவமனை அளிக்கும் சிகிச்சை இந்தியாவிலேயே மிகவும் விரைவானது என அங்கீகரிக்கப்பட்டு,உலக பக்கவாத அமைப்பான ( வேர்ல்டு ஸ்ட்ரோக் ஆர்கனைசேஷன் ) கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு டயமண்ட் ஸ்டேட்டஸ் என்ற வைர அந்தஸ்துடன் ஏஞ்சல் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. மருத்துவமனையின் தலைவர் நல்லா.ஜி. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இதில், இயக்குனர் அருண் பழனிசாமி மற்றும் பக்கவாத சிகிச்சை மருத்துவ குழுவினர்,மருத்துவர்கள் பாஸ்கர்,செந்தில் குமார்,பிரகாஷ்,ராஜேஷ் சங்கர் ஐயர்,நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கணேசன்,சுரேஷ் ஜெயபாலன்,பார்த்திபன், ரோஹித்,அவசர சிகிச்சையின் தலைமை ஆலோசகர் டாக்டர் திலீபன்,நியூரோ ரேடியாலஜிஸ்ட்-ஸ்ரீராம் வரதராஜன் , இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி குழு டாக்டர் மேத்யூ செரியன்,பங்கஜ் மேத்தா,டாக்டர் கோபிநாதன்,எட்மண்ட்,ஆகியோர் பேசினர்.
பக்கவாத நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு மணி நேரத்தில்,மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்குவது மிகமிக அவசியம். பொன்னான காலம் என்று கருதப்படும் முதல் 3 முதல் 4.5 மணி நேரத்திற்குள் நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியத்துவம் ஆக உள்ளதால், கே.எம்.சி.எச். மருத்துவமனையில்,நவீன உபகரணங்களுடன் நரம்பியல் நிபுணர்கள், ரேடியாலஜி சிகிச்சை நிபுணர்கள்.அவசரகால மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் கொண்ட சிறப்புக் குழுவொன்று 24 மணி நேரமும் செயல்படுகிறது.
அதிநவீன மருத்துவம் மற்றும் பயிற்சி பெற்ற நிபுணர்களுடன் பக்கவாத நோயாளிகளுக்கு உலகத்தரமான சிகிச்சை வழங்குவதால், முழுமையான பக்கவாத சிகிச்சை மையமாக கே.எம்.சி.எச்.இருப்பதாக தெரிவித்தனர். மூளையில் இரத்தக் கட்டியை அகற்றி இரத்தம் உறைவதைத் தடுக்கும் உடனடி சிகிச்சை முறையான ஸ்ட்ரோக் ரெடி சிகிச்சை, பக்கவாத சிகிச்சைக்காக ஆசியாவின் முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் வசதியும் இங்கு உள்ளது குறிப்பிடதக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்