• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிராண்ட் ரீஜன்ட் விடுதி சார்பில் ‘சம்மர்ஸ் ட்ரீம்’ என்ற ஷாப்பிங் நிகழ்ச்சி

March 23, 2022 தண்டோரா குழு

கோவையின் இளம் தொழில் முனைவோருக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கிராண்ட் ரீஜன்ட் விடுதி சார்பில் ‘சம்மர்ஸ் ட்ரீம்’ என்ற ஷாப்பிங் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கோவை அவினாசி சாலையில் உள்ள கிராண்ட் ரீஜன்ட் விடுதி சார்பில் வரும் ஏப்ரல் மாதம் 2 மற்றும் 3ம் தேதிகளில் ‘சம்மர்ஸ் ட்ரீம்’ என்ற ஷாப்பிங் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளம் தொழில் முனைவோர்களின் தயாரிப்புகள், கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு கிராண்ட் ரீஜன்ட் விடுதியில் இன்று நடைபெற்றது.

அப்போது விடுதியின் இயக்குநர் சரிதா மற்றும் பொது மேலாளர் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ஷாப்பிங் நிகழ்ச்சி மூலமாக கோவையின் இளம் தொழில் முனைவோருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.உணவு, வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள்,இயற்கை உணவுகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது.ஏப்ரல் 2 மற்றும் 3ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெறுகின்றன.

இதில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.இதில் வரும் வருவாயின் ஒரு பகுதியை அறக்கட்டளைகளுக்கு வழங்கவும்,பண்டிகை காலங்களில் இதே போல் ஷாப்பிங் திருவிழாக்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க