• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐசிஐசிஐ வங்கி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கூட்டு சேர்கிறது!!

March 23, 2022 தண்டோரா குழு

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி இன்று அறிவித்துள்ளது.

’சென்னை சூப்பர் கிங்ஸ் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு’ என அழைக்கப்படும் இந்த கார்டு, பிரபலமான அணியின் மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்காக பிரத்யேக சலுகைகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அட்டை, விளையாட்டு ஆர்வலர்களுக்கு தங்களுக்கு பிடித்த அணிகளுடன் இணைவதற்கும், கிரெடிட் கார்டின் பலன்களை பெறுவதற்கும் வங்கியால் வழங்கப்படும் பிரத்யேகமான கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டுகளின் மற்றொரு கூடுதல் அம்சமாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஐசிஐசிஐ வங்கி இங்கிலாந்தின் தொழில்முறை கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் உடன் இணைந்து பிராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது.

இந்த கூட்டு செயல்பாடு குறித்து கூறுகையில்,

“ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதுமையான, சக்திவாய்ந்த மற்றும் தனித்துவமான மதிப்பு முன் மொழிவுகளை வழங்குவதில் செழுமையான பாரம்பரியத்தை கொண்டுள்ளது.சிஎஸ்கே உடன் இணைந்து கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பிரத்யேக சலுகைகள் மற்றும் தனித்துவமான வங்கி சலுகைகள் ஆகியவற்றை வழங்குகிறது.

இந்த கார்டு இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் விளைவாகும். மேலும் சிஎஸ்கே ரசிகர்கள் அதை மிகவும் விரும்புவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட், தலைமை நிர்வாக அதிகாரி, கே.எஸ். விஸ்வநாதன் கூறுகையில்,

ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கூட்டு செயல்பாடு, நாடு முழுவதும் உள்ள எங்கள் ரசிகர்களுக்கு பலனளிக்கும். மேலும் மஞ்சள் நிறத்தை எங்கும் பரவச் செய்யும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள் 5676766 என்ற எண்ணுக்கு ‘கிங்’ என எஸ்எம்எஸ் அனுப்பியோ அல்லது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கான பிரத்யேக அனுபவங்கள்:

• 2000 வெகுமதி புள்ளிகளை புதிதாக இணைவது மற்றும் கார்டை புதுப்பித்தல் மூலம் கிடைக்கும் 2000 ரிவார்ட் பாயிண்ட்களை சிஎஸ்கே விற்பனை பொருள்களின் மீது சலுகையாக பெறலாம்

• சிஎஸ்கே விளையாட்டு போட்டிகளுக்கான சீசனின் போது டிக்கெட்டுகளை இலவசமாக பெறலாம்

• மாதாந்திர அதிக செலவு செய்பவர்கள், முக்கிய வீரர்களால் கையொப்பமிட்ட நினைவு சின்னங்களை பெறுவார்கள்

• தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுடன் பிரத்யேக சந்திப்பு மற்றும் வாழ்த்து சந்திப்பு

• அணியின் பயிற்சியின் போது கலந்து கொள்ளும் வாய்ப்பு

கார்டை தகுதி பெறும் அதிக செலவு செய்பவர்களுக்கு கிடைக்கும் மற்றும் போட்டியின் நிர்வாக குழுவால் அமைக்கப்பட்டுள்ள நடைமுறையில் உள்ள கோவிட்-19 விதிமுறைகளுக்கு இணங்க இருக்கும்.

பிற முக்கிய பலன்கள்:

• சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நாட்களின் போது அனைத்து சில்லறை செலவினங்களுக்கும் 10 வெகுமதி புள்ளிகள் (1 வெகுமதி புள்ளி ஸ்ரீ ரூ.0.25)

• மற்ற நாட்களில் அனைத்து சில்லறை செலவினங்களுக்கும் 2 வெகுமதி புள்ளிகள்

• இந்தியாவின் உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளுக்கு இலவச அனுமதி

• புக் மை ஷோ மற்றும் இன்பாக்ஸ் இல் டிக்கெட் முன்பதிவுகளில் பிரத்யேக சலுகைகள்

• வங்கியின் “சமையல் விருந்துகள்” திட்டத்தின் மூலம் உணவருந்துவதற்கான பிரத்யேக சலுகைகள்

• ஹெச்பிசிஎல் பெட்ரோல் நிலையங்களில் 1 சதவீதம் கூடுதல் வரி சலுகை

மேலும் படிக்க