• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் மார்ச் 30ம் தேதி 5 மண்டல மண்டல தலைவர்கள் மறைமுக தேர்தல்

March 22, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் மண்டல தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வரும் 30-ம் தேதி காலை 9.30 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த தேர்தலில் விருப்பம் உள்ள கவுன்சிலர்கள் தங்களது வேட்பு மனுக்களை அன்றைய தினம் தாக்கல் செய்யலாம். இந்த வேட்பு மனுவில் ஒரு கவுன்சிலர் முன்மொழிந்திருக்க வேண்டும். அதேபோல் மற்றொரு கவுன்சிலர் வழிமொழிய வேண்டும். ஒரே ஒரு நபர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவராக அறிவிக்கப்படுவார்.

ஒன்றுக்கும் மேற்பட்டவர் வேட்புமனு தாக்கல் செய்தால், அந்த மண்டலத்திற்கு உட்பட்ட கவுன்சிலர்கள் ரகசியமாக வாக்களித்து மண்டல தலைவர்களை தேர்வு செய்வார்கள்.
இதுதவிர மாநகராட்சியில் கணக்குகள் குழு, கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதான குழு, சுகாதார குழு, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி குழு, பணிகள் குழு ஆகிய 6 நிலைக்குழுக்கள் உள்ளன.

இந்த 6 குழுக்களின் உறுப்பினர்கள் தேர்தல் வரும் 30-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு நடைபெறும். இதில் கணக்குகள் குழு, கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதான குழு, சுகாதார குழு ஆகிய குழுக்களில் தலா 9 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் தலா 5 உறுப்பினர்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி குழு, பணிகள் குழு ஆகிய குழுக்களுக்கு தலா 15 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் தலா 8 உறுப்பினர்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து 31-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு மேற்கண்ட குழுக்களின் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் அந்தந்த குழு உறுப்பினர்கள் குழுவின் தலைவர்களை தேர்வு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க