• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

75-வது சுதந்திர தினவிழாவையொட்டி கோவையில் 7 நாட்கள் நடைபெறும் ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’

March 21, 2022 தண்டோரா குழு

75-வது சுதந்திர தினவிழாவையொட்டி ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ கோவை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் பல்துறை பணிவிளக்க கண்காட்சிகள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

75-வது இந்திய சுதந்திர தின பவள விழாவினையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி கோவை மாவட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரையிலான 7 நாட்களும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை வ.உ.சி மைதானத்தில் பல்துறை பணிவிளக்க கண்காட்சிகள் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை துவங்கி வைக்க உள்ளனர். இக்கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், அவர்களை பற்றிய சிறு குறிப்புடன் இடம்பெறவுள்ளன.

வேளாண்மைத்துறை,தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, மகளிர் திட்டம், வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சுகாதாரத்துறை,மாவட்ட சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் உள்ளிட்ட துறைகள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்த அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

மேலும் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து 75-வது சுதந்திர தின பவள விழாவினையொட்டி மாரத்தான் ஓட்டம், மாவட்ட அளவில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறைகளின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு குறித்த கலைநிகழ்ச்சிகள் மாலை நேரங்களில் அனைத்து நாட்களிலும் நடைபெறவுள்ளன.

அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிற மாவட்டங்களில் நடைபெற்றதை விட சிறப்பாக இப்பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை நம் மாவட்டத்தில் நடத்திட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க