• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இறந்த ஆண் யானைக்கு ஆந்தராக்ஸ் நோய்த்தொற்று இல்லை

March 21, 2022 தண்டோரா குழு

கோவை மாங்கரை அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட ஆண் யானைக்கு ஆந்தராக்ஸ் நோய்த்தொற்று இல்லை வனத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் கோவை மாங்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 30 வயது ஆண் யானை கண்டறியப்பட்டது. யானையின் துவாரங்களில் ஆந்த்ராக்ஸ் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் யானையைச் சுற்றி 50 மீட்டர் பாதுகாப்பு போடப்பட்டது.

கடந்த இரு தினங்களுக்கு முன் யானையின் உடைய கழிவு மாதிரிகள் சென்னை ஆய்வகத்திற்கு தொற்று நோய் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்தப் பரிசோதனையில் ஆந்தராக்ஸ் நோய் இல்லை என்பது ஆய்வறிக்கையில் உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

யானையின் அடிவயிற்றில் குத்து காயம் தென்பட்டுள்ள நிலையில், யானைகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்திருக்கலாம்
என வனத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க