• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஃபயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் இன் மேனேஜ்மென்ட் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா

March 20, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர், ஃபயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் இன் மேனேஜ்மென்ட், தொழில்துறையின் மொழியைப் பேசும் ஒரு சர்வதேச வணிகப் பள்ளி. இதன் இரண்டாவது பட்டமளிப்பு விழா கல்லுரி வளாகத்தில் கொண்டாடபட்டது.

இந்த பட்டமளிப்பு விழா 2018-20 மற்றும் 2019-21 ஆண்டு மேலாண்மை படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு நிறுவன இயக்குநர் டாக்டர் பி. ஸ்ரீநிவாஸ் ராவ் தலைமையில் பட்டமளிப்பு ஊர்வலத்துடன் தொடங்கியது.இதைத் தொடர்ந்து அறக்கட்டளை மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கேபிஆர் குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி விழாவின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ரிஸ்க் எடுப்பது, ஆர்வமுள்ள துறைகளில் சிறந்து விளங்குவது மற்றும் சொந்த சாம்ராஜ்யத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை வலியுறுத்தினார்.விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, ஆர்எஸ்எம் ஆட்டோகாஸ்ட் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.இளங்கோ, வாழ்க்கையில் நேர்மை, ஒழுக்கம், கடமை ஆகிய மூன்று அடிப்படை பண்புகளை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

வெற்றிகரமான தொழில்முனைவோரின் கதைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் ஒழுக்கத்தின் பங்கைக் கண்டறிந்து புரிந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு அவர் பரிந்துரைத்தார்.

அறங்காவலர் உறுப்பினர்கள் நிறுவனம் நிறுவப்பட்ட நோக்கங்களையும் அதன் மாணவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும் என்று கனவு காண்கிறது என்பதையும் மீண்டும் வலியுறுத்தினர்.

பட்டமளிப்பு விழாவில் மாணவி ரெட்டி கவிதா கனகராஜ், விஜய லக்ஷ்மியின் நினைவேந்தல் நடைபெற்றது. இறுதியாக இயக்குனரின் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.

மேலும் படிக்க