March 18, 2022
தண்டோரா குழு
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச்.வினோத்தே இயக்கவுள்ளார். போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.
இப்படத்தின் முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில், அஜித்தின் 62வது படம் குறித்த தகவலும் கசிந்து வந்தது.
இந்த நிலையில் அஜித்தின் 62-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாகவும்,அடுத்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இப்படத்தை வெளியிட இருப்பதாகவும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.