வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது:
விவசாயிகள் சங்கம் ஜாதி மதம் கட்சி சார்பற்றது. எங்கள் சங்கத்தின் சார்பாக பல கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியர் மூலமாக முன்வைத்துள்ளோம்.நாங்கள் அளிக்கும் மனுக்கள் மீது தக்க நடவடிக்கை மத்திய மாநில அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நேரடி போராட்டம் நடத்த உள்ளோம்.
வன உயிர்கள் பாதுகாப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். வனத்திற்குள் சென்று வேட்டையாடுபவர்களுக்கு தண்டனை கொடுக்க இந்த சட்டம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.அதிலேயே தற்காப்புக்காக ஒரு விலங்கை கொலை செய்தால் குற்றம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் பட்டா நிலத்திற்கு வரும் விலங்குகள் உயிருக்கும் பயிருக்கும் சேதம் விளைப்பதால் அப்பாவி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதைப்போல் கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் நேரடியாக பொதுமக்களுக்கு வாடகைக்கு கொடுத்து விவசாய பூமிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் மாற்ற வேண்டும் என்றார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்