• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி வீராங்கனைகளுக்கு ஆட்சியர் பாராட்டு

March 17, 2022

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற கோவை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆட்சியர்சமீரன் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ்நாடு பாராஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி முதல் மார்ச் மாதம் 6ம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டிகளில் குண்டு எறிதல், வீல்சேர் ஒட்டம்,தட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல்,பளுதூக்குதல், நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் கோவை மாவட்டத்திலிருந்து 52 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில் 18 வீரர், வீராங்கனைகள் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெற்று 12 தங்கம், 12 வெள்ளி, 7 வெண்கலம் என 31 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இப்போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெற்ற மனோஜ்குமார், முத்துராஜா, வித்யா, சந்தானகுமார், வீராசெல்வம், கீர்த்திகா,பிரியதாஸ் ஆகிய தடகள வீரர்களும், பளுதூக்குதல் வீரரான ராமசந்திரன் என மொத்தம் 8 நபர்கள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் அனைவரும் ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த் ராம்குமார், கோவை மாவட்ட பாரா ஒலிம்பிக் சங்க தலைவர் கன்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க