• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிஜாப் விவகாரம்- அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்

March 17, 2022 தண்டோரா குழு

கல்வி கூடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் அந்த தீர்ப்பை கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை நிராகரிக்கிறோம், கர்நாடக உயர்நீதிமன்றமே காவிகளுக்கு அடிபணியாதே, முஸ்லீம் விரோதபோக்கோடு செயல்படாதே, ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என்ற பதாகைகளை ஏந்தி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் யை கண்டித்தும் கர்நாடக உயர்நீதிமன்றத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க