• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை சேர்ந்த பெண்ணிற்கு விருது

March 14, 2022 தண்டோரா குழு

தமிழ் எக்கோஸ் ரேடியோ(Tamil Echos Radio)மற்றும் ரூரல் பாஸ்கெட்(Rural Basket)நிறுவனம் இணைந்து நடத்திய 75 நம்பிக்கை தமிழச்சி 2022 கடந்த 12ம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்றது. விருதுகளை மாவட்ட நீதிபதி சமீனா வழங்கினார்.

இந்த நிகழ்வில் கோவையை சார்ந்த
பைரவி ஈவெண்ட் ஆர்கனைசைர்ஸ் (Bhairavi Event Organisers)இன் உரிமையாளர் காந்திமதிக்கு நம்பிக்கை தமிழச்சி (சிறந்த பெண் சமூக சேவகர் மற்றும் தொழில் முனைவோர்) என்ற விருது வழங்கப்பட்டது.

இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஈவெண்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வருகிறார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள், கார்ப்பரேட் மீட்டிங்ஸ், கண்காட்சிகள் நடத்திகைகொடுத்து இருக்கிறார்.

இது மற்றுமின்றி, தமிழகம் முழுவதும் பல என்.ஜி ஓக்கள் உடன் இணைந்து பெண்களுக்கு திறன் வளர்ச்சி திட்டங்கள் வழங்கி வருகிறார். இதன் மூலம் பெண்கள் சொந்த தொழில் தொடங்க வழி வகுத்து தருகிறார்.
மேலும், இந்த கொரோனா காலகட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்ட கோவை மக்களுக்கு பண தேவை இருக்கும் பெண்களை இணைத்துக்கொண்டு உணவு தயாரித்து வழங்கி வருகிறார்கள்.உளவியல் தேவை இருக்கும் மக்களுக்கு மன தைரியம் வழங்கி வருகிறார்கள். இதன் மூலம் சுமார் 100 பேர் பலன் அடைந்து இருக்கிறார்கள்.

இது குறித்து காந்திமதி கூறுகையில்,

“எந்தப் பின்னணியில் இருந்து வரும் பெண்களும் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கென ஒரு தொழிலைக் கொண்டிருப்பது முக்கியம் என்பதை நான் எப்போதும் விரும்புகிறேன். இது மரியாதை அல்லது சமத்துவம் மட்டுமல்ல, நம் சமூகத்தில் ஒரு பெண்ணின் அடிப்படைத் தேவையாக இதை உருவாக்க விரும்பினேன்.”என்றார்.

மேலும் படிக்க