• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், பாஜகவை விரட்ட வேண்டும்- தொல்.திருமாவளவன் கோவையில் பேட்டி

March 13, 2022 தண்டோரா குழு

நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், பாஜக வை விரட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்த அவர்,

அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக நான்கில் ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. ஏற்கனவே ஆண்ட மாநிலங்களில் மீண்டும் ஆளும் வாய்ப்பை பெற்றுள்ளது.ஆனால் இது மகத்தான வெற்றி என பாஜக வினர் தம்பட்டம் அடிக்கிறார்கள். பிரதமரே இமாலய வெற்றி என்கிறார்.

இதை வைத்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள்.ஆனால் உபியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சரிவை சந்தித்துள்ளனர். எனவே இது பாஜவுக்கு சாதகம் என கூற முடியாது என தெரிவித்த திருமாவளவன், காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஒன்றாக சேராமலும் மத வெறுப்பு அரசியலை கடைபிடிப்பதாலும் இந்த தோல்வி.என அவர் தெரிவித்தார்.

மேலும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி,வேலை வாய்ப்பு பற்றி பாஜக பேசவில்லை என்றும் அதற்கு மாறாக ஜெய்ஸ்ரீராம் என்றும் இஸ்லாமிய எதிர்ப்பு மூலம் மக்களை திசைதிருப்ப பார்க்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார்.இந்தியாவை சூழ்ந்துள்ள இந்த ஆபத்தை விரட்ட காங்கிரஸ் இடதுசாரி உள்ளிட்ட அனைத்து அரசியல் அமைப்புகள் ஒன்று சேர வேண்டும் என்றும்,தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், அனைத்து தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் அதேபோல்நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் பாஜக வெற்றி பெற்று விட கூடாது எனவும் அவர் கேட்டுகொண்டார்.

மேலும் ஆணவ கொலைகளுக்கு எதிராக இயற்ற வேண்டும்.மாநில அரசால் கூட இந்த சட்டம் இயற்ற முடியும். எனத்தெரிவித்த திருமாவளவன்,பாஜக இத்தகைய ஆணவ கொலைகளை ஊக்கப்படுத்தும் என்பதால் தமிழக முதலமைச்சர் இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும்கோகுல்ராஜ் கொலை தீர்ப்பு என்பது இது போன்ற ஆணவ கொலைகளுக்கு முடிவு கட்டும் என நினைக்கிறேன் எனக்கூறய அவர்,
உச்சநீதிமன்றம் சாதிமத மோதல்களை தடுக்க தனி உளவு பிரிவு உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.எனவே தமிழக முதல்வர் உடனடியாக இந்த தனிப்பிரிவை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜக வை விரட்ட வேண்டும்.

அதற்கு ஈகோவை பார்க்காமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனதெரிவித்த அவர்,எந்த கட்சியின் தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என்பது முக்கியமல்ல.அனைத்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டமைப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க