• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது – முக.ஸ்டாலின்

March 11, 2022 தண்டோரா குழு

நாட்டிலேயே உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என கோவையில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் காணொளி வாயிலாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை பாரதியார் பலகலைக்கழகத்தில் நடைபெற்று வரும் தென்மண்டல பலகலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

இந்த மாநாடு ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என்றும் தரமான உயர்கல்வி வழங்குவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றும் உயர்கல்விக்காக மட்டும் 5369 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும் கூறினார்.

2020 – 2021 தேசிய தர வரிசை பட்டியலில் தமிழகம் முதல் மூன்று இடத்தில் உள்ளது எனவும் உயர்கல்வி மாணவர் சேர்க்கையிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனவும் பெருமிதம் கொண்டார்.தொழிற்கல்வி, மருத்துவக் கல்வியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்,பெண் கல்விக்கு தமிழகம் முன்னுரிமை வழங்கி வருவதாகவும் திறன் சார்ந்த கல்வி என்பது தற்போது அவசியமாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதேபோல் பாடத்திட்டத்தில் பிற்போக்கு தனத்தை ஒன்றிய அரசு கடை பிடிப்பதாகவும் கல்வியை பொது பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாறர வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியதுடன் இந்த மாநாட்டின் மூலம் உயர்கல்வி வளர்ச்சி அடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அகில இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் தலைவர் துணை வேந்தர் திருவாசகம்,கோவை பாரதியார் பலகலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க