• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் கைகடிகாரம் திருடிய வயதான தம்பதியர்

March 10, 2022 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், செல்போன், பழக்கடை, பேக்கரிகள் உள்ள பல்வேறு கடைகள் உள்ளன.அங்குள்ள, மலைகொழுந்து என்பவரது செல்போன் உதிரிப்பாக கடையின், முன்புறம் கைக் கடிகாரங்களை விற்பனைக்காக வைத்துள்ளார்.

இந்நிலையில்,இன்று மதியம் 1 மணியளவில் கடையின் அருகே பேருந்துக்காக நின்றிருந்து வயதான தம்பதி ஒருவர் நீண்ட நேரமாக அங்கேயே நின்றுள்ளனர்.கடையின் உரிமையாளர் அருகே உள்ள மற்றொரு கடைக்கு சென்ற நேரத்தில்,கண்ணிமைக்கும் பொழுதில் அங்கிருந்த கடிகாரத்தை முதியவர் திருடி பெண்ணிடம் கொடுத்துள்ளார்.அந்த பெண் அதை பையில் போட்டுக்கொண்ட பின்பு அங்கிருந்து சென்றனர்.

இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.அதை பார்த்த அங்கிருந்த மற்றொரு நபர், வயதான தம்பதியை பிடித்து சோதனை செய்த போது, அவர்கள் பையில் கடிகாரம் இருந்த நிலையில் இருவரையும் காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர்.
அந்த வயதான தம்பதிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு,பின்னர் எச்சரித்து அனுப்பினர்.

மேலும் படிக்க