• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டிஜிட்டல் இன்டேன் எல்பிஜி சமையல் எரிவாயு பில் அறிமுகம்

March 10, 2022 தண்டோரா குழு

கோவையின் இன்டேன் சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு இனி டிஜி்ட்டல் முறையில் பில்கள் வழங்கப்படும். இது மார்ச் 10 முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய முறை கோயம்புத்துார், சண்டிகர், ராஞ்ச்சி மற்றும் சூரத் நகரில் முதல் கட்டமாக அறிமுகமாகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பசுமையை நோக்கி செல்வோம் என்ற முயற்சியில் ககித பயன்பாட்டினை குறைக்கும் நோக்கில் இது அறிமுகமாகிறது. தற்போது இன்டேன் வாடிக்கையாளர்கள் தங்களது எரிவாயு பெறும்போது காகித பில்களை பெற்று வருகின்றனர்.புதிய இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் குறுஞ்செய்தியை அனுப்பி தங்களது கைபேசியில் பெறலாம். அல்லது https://cx.indianoil.in என்ற இணையத்திலும் பார்வையிடலாம். எனினும், வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வழங்குபவரிடம், சிலிண்டருக்கான தொகையை அறிந்து கொண்டு பணம் தரலாம்.

வாடிக்கையாளர்கள் வழக்கமான பில்களை பெற விரும்பினால், இந்தியன் ஆயில் ஒன் ஆப் அல்லது எரிவாயு விநியோகஸ்தரிடம் தங்களது விருப்பத்தை தெரிவித்து பெறலாம்.
என இந்தியன் ஆயில் தென் மண்டலம்
தலைமை பொது மேலாளர் V. வெற்றி செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க