• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏரோ ஸ்கேட்டோ பால் போட்டியில் பங்கேற்று கோப்பையுடன் திரும்பிய சிறுவர்களுக்கு உற்சாக வரவேற்பு

March 9, 2022 தண்டோரா குழு

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோ பால் விளையாட்டு போட்டியில் தமிழக அணியில் கோவை மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி கோப்பையுடன் திரும்பிய பள்ளி சிறுவர்களுக்கு கோவை இரயில் நிலையத்தில் அசத்தல் வரவேற்பு அளிக்கப்பட்டது.

7 வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோ பால் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில்,பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.தமிழ் நாடு சார்பாக கோவை உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, தமிழ்நாடு ஏரோ ஸ்கேட்டோ பால் வீரர், வீராங்கனைகள்,50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் கோவை மாவட்டம், கோவைப்புதூர் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்களான,ஜெய்ஸ்னூ,அலிப்ஷா ஆகிய இரு மாணவர்கள் சப் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் அனைத்து பிரிவுகளிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதல் இடத்தை பிடித்த நிலையில்,தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வெற்றி கோப்பையுடன் கோவை இரயில் நிலையம் திரும்பிய ஜெய்ஸ்னு,அலிப்ஷா ஆகிய இரண்டு சிறுவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தேசிய அளவில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்கள் பேசுகையில்,கடந்து ஐந்து வருடங்களாக சாலைகளில் பயிற்சி செய்தே இந்த வெற்றியை பெற்றுள்ளதாகவும், விளையாட்டு துறையில் கூடுதல் கவனம் செலுத்தும் தமிழக முதல்வர் நல்ல முறையில் பயிற்சி பெற கோவைப்புதூர் பகுதியில் பயிற்சி மைதானம் அமைக்க வேண்டும் என மாணவர்கள் கேட்டு கொண்டனர்.

தொடர்ந்து பேசிய பெற்றோர்,பல்வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் செல்லும் எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கேட்டு கொண்டனர்.

மேலும் படிக்க