• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீட்டர் ஆட்டோ கட்டணத்தை அதிகப்படுத்த தமிழக முதல்வர் முன்வரவேண்டும் – ஏ.பி.ஜே.ஆட்டோ சங்க நிர்வாகிகள் கோரிக்கை

March 8, 2022 தண்டோரா குழு

நீண்ட காலமாக உயர்த்தாமல் இருக்கும் மீட்டர் ஆட்டோ கட்டணத்தை அதிகப்படுத்த தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என கோவையில் ஏ.பி.ஜே.ஆட்டோ சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏ.பி.ஜே மீட்டர் ஆட்டோ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இதில்,செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.

மகளிர் தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிரை கவுரவிக்கும் விதமாக சிறப்பு விருந்தினராக பெண் வழக்கறிஞர் தேஜஸ்வினி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.

முன்னதாக சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில்,

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஆட்டோ ஓட்டுனர்கள் போதிய வருமானமின்றி தவிப்பதாகவும், எனவே ஆட்டோ ஓட்டுனர்களின் நலன் கருதி, நீண்ட காலமாக உயர்த்தாமல் இருக்கும் மீட்டர் ஆட்டோ கட்டணத்தை அதிகப்படுத்த தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நிகழ்ச்சியில், ஏபிஜே மீட்டர் ஆட்டோ நிர்வாகிகள் சேவியர்,ராம் விஷாந்த்,பத்மநாபன்,பிரதீப், கோவை பாபு,ஒண்டிப்புதூர் மணிகண்டன், அருண் கௌரி ,அருண் பிரபு ,சாமி ராஜ் பாபா, பிஎன் புதூர் சதீஷ்குமார் ,எஸ் எஸ் கணேசன், ஹெல்பிங் குமார், துளசி ,அசார் முனீர் ,துடியலூர் ஆனந்த் ,ரஞ்சித் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

மேலும் படிக்க