• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திலிருந்து அதிக அளவிலான தொழில் முதலீடுகளை எதிர்பார்க்கிறோம் -பப்புவா நியூ கினியா ஆளுநர்

March 7, 2022 தண்டோரா குழு

பப்புவா நியூ கினியா நாட்டில் தமிழகத்திலிருந்து அதிக அளவிலான தொழில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் பயணமாக கோவைக்கு வருகை தந்த பப்புவா நியூகினியா நாட்டின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாண ஆளுநர் சசிந்திரன் முத்துவேல் வடவள்ளி பகுதியிலுள்ள அந்நாட்டிற்கான இந்திய உயர்மட்ட ஆணையர் விஷ்ணு பிரபு வீட்டிற்கு சென்றார்.

அங்கு கோவை மாவட்ட தொழில் அமைப்பினருடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில்,தொழில் அமைப்பினர் அந்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக பல்வேறு விளக்கங்களை கேட்டு பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

தங்கள் நாட்டில் 95 சதவீத நிலங்கள் பொதுமக்கள் வசம் இருப்பதாகவும் 5 சதவிகித நிலம் மட்டுமே அரசின் வசம் இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகளை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் கல்வி, மருத்துவம் மற்றும் சிறு குறு தொழில்களில் அதிக அளவிலான முதலீடுகள் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

தற்போது தங்களது நாட்டில் தரமான கல்வி என்பது குறைவாகவே இருப்பதாகவும் ஆனால் திறமையான இளைஞர்கள் இருப்பதாகவும் கூறினார். வருகிற ஏப்ரல் மாதம் சென்னையில் தமிழக முதலமைச்சருடன் தொழில் முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாகவும் அப்போது தங்களது நாட்டில் உள்ள வாய்ப்புகள் குறித்த அரங்குகள் அமைக்க இருப்பதாகவும் கூறிய அவர் ,கோவை துடியலூர் பகுதியில் பப்புவா நியூகினியா நாட்டின் வர்த்தக மையம் அமைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தங்களது நாட்டில் ஆஸ்திரேலியா அதிக தொழில் முதலீடுகளை செய்திருப்பதாகவும் அதற்கு அடுத்தபடியாக சிறு குறு தொழில்களில் சீனா அதிகளவிலான முதலீடுகள் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், இந்தியாவைப் பொருத்தவரை முதலீடு என்பது குறைந்தளவே இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க