• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐந்து ரூபாயில் சித்த மருத்துவம் – கோவையில் துவக்கம்

March 7, 2022 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் பகுதியில், போகா அறக்கட்டளை சார்பில், ஓம் ஸ்ரீ போகா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

தமிழ் சித்த மருத்துவத்தை பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற, போகா அறக்கட்டளையின் புதிய கிளை, ஓம் ஸ்ரீ போகா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் கோவை காந்திபுரம் பகுதியில், இன்று துவங்கப்பட்டது.

இதனை கொடிசியா தலைவர், இரமேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். RVS கல்வி அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி நடராஜன் மற்றும் சசிதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போகா அறக்கட்டளையின்
நிறுவனத்தலைவர் போகானந்தா கூறும்போது,

2018 முதல் போகா அறக்கட்டளை என்ற மையத்தை,துவக்கி நடத்தி வருகின்றதாகவும், ஆரம்ப கால கட்டத்தில் நோயற்ற உலகம், பசியற்ற சமூகத்தை உருவாக்கும் வகையில், வீட்டிற்கு ஒருவர் பாரம்பரிய மருத்துவத்தை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் அனைவருக்கும் இந்த ஞானத்தை வழங்க முன்வந்துள்ளதாகவும், ஏற்கனவே மக்கள் முதலுதவி சிகிச்சை செய்து பலனடையும் விதமாக *போகா அக்கு ஹெல்த் ஆன்ட்ராய்டு மொபைல் அப்ளிக்கேஷன் (Bogaa Acu Health)* உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவமாக, மருத்துவ நோயாளி ஒருவர் தன்னிடம் வந்து, பணம் இல்லை என்றால் மருத்துவம் பார்க்க வரவேண்டாம் என்று வேறு ஒரு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கூறியதாக தெரிவித்த நிலையில் மக்களுக்கு இலவச மருத்துவம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்ததாக கூறினார்.

எனவே, அனைத்து மக்களுக்கும் இந்த சித்த மருத்துவத்தை கொண்டு சேர்க்க வேண்டும் அதே சமயத்தில், இலவசமாக கிடைத்தால், மக்களிடம் மதிப்பு இல்லாமல் போய் விடும் என்றும், மருத்துவர் கட்டணமாக ரூ 5/- வசூலித்து வருவதாக தெரிவித்தார். இதனால் சித்த மருத்துவத்தில் மக்கள் அதிகளவில் வந்து பயன்பெறும் வாய்ப்பு உள்ளது என்றும், இங்கு அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவ முறைப்படி குணமாக்க முடியும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக, கொடிசியா தலைவர் இரமேஷ் பாபு, RVS கல்வி நிறுவன அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி நடராஜன், சசிதர், சித்த மருத்துவர் பவித்ரா, இரேவதி மற்றும் அறங்காவலர்கள் பிரகாஷ், மணிகண்டன், ஜெயக்குமார், ஜாஸ்மின், சுரேஷ், மருத்துவ பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க