• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊட்டி கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் ஆர்தர் கால்பந்து ரோலின் கோப்பை போட்டி துவக்கம்

March 7, 2022 தண்டோரா குழு

ஊட்டியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி சார்பாக அடுத்த கால்பந்து உலகக் கோப்பைக்கான போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகிறது இப்போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி சார்ந்த அணியினர் கலந்து கொள்கின்றனர்.

அனைத்து போட்டிகளும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. அனைத்துபோட்டிகளும் மாலை நேரத்தில் நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்துமே கல்லூரியின் இனையதளம் மற்றும் யூடூப் வழியாக நேரடியாக ஒளிப்பரப்பு செய்யபடும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தனர். மேலும் போட்டியை துவக்கி வைத்த கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் நேச மெர்லின் போட்டியில் பங்கேற்ற வீரர்களிடம் பேசுகையில், ஆர்தர் சுழல் கோப்பை போட்டியை ஆர்தர் எனற பெயரில் நடத்துகின்றோம் ஏனென்றால் பல வருடங்களுக்கு முன் ஆர்தர் இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆர்தர் ஒரு தனி மிஷனரியாக ஏழை எளிய மக்களுக்கு உதவும் வண்ணமாக தனது வாழ்க்கையை நம் மண்ணில் சமர்ப்பித்தார்.

அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே அவர் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் சுழல் கோப்பை நடத்தப்படுகிறது என தெரிவித்தார். மேலும் போட்டியை காண வந்த ரசிகர் இடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இருநாட்டு தலைவர்களுக்கிடையே நல்ல சமாதானம் மற்றும் மகிழ்ச்சி உண்டாக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கல்லூரியில் உடற்பயிற்சி அலுவலர் டேவிட் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் என பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க