• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்ள வல்லுநர் குழு அமைக்க திட்டம்

March 5, 2022 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது.

கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது. குப்பையை அகற்ற ரூ.60 கோடி செலவில் பயோ-மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனமீட்டர் குப்பை தரம் பிரித்து அழிக்கப்படுகிறது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதனிடையே மார்ச் 4ம் தேதி மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. குப்பைகள் ஒரே பகுதியில் சேகரிக்கப்படுவதால், தீ மளமளவென பரவி, கரும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால், சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் மக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தீ விபத்து ஏற்படுவது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீ விபத்துகள் குறித்து விரைவில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும், என்றார்.

மேலும் படிக்க