• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இது திராவிட மண் எவனும் நெருங்க முடியாது; மோடி மஸ்தான் வேலை இங்கு பலிக்காது -கோவையில் ஸ்டாலின் பேச்சு !

March 19, 2021

கோவை குனியமுத்தூர் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

கோவை ஈச்சனாரி அருகே திமுக தலைவர் ஸ்டாலின்,கிணத்துக்கடவு, சூலூர், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திமுக தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். உள்ளாட்சியில் ஊழல் ஆட்சி செய்தவர் அமைச்சர் வேலுமணி எனவும், ஊழல் செய்வதை தொழிலாக கொண்டவர் வேலுமணி எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

பினாயில், சுண்ணாம்பு, எல்இடி பல்பு வாங்கு வதில் ஊழல் செய்தவர் வேலுமணி, இதுகுறித்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்துவதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சொல்லியுள்ளது, ஊழல் நடந்துள்ளதை அரசே ஒப்புக் கொண்டுள்ளதை காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.2 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகவும், வேலுமணியால் அதிமுக ஆட்சியை இழக்கும் எனவும் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்தார்.

கோவையில் வேலுமணி ஊழல் சம்ராஜ்ஜியம் நடத்துகிறார் எனவும், தேர்தலில் வெற்றி பெற வேலுமணி போலீசை கையில் வைத்து பணம் கொடுத்து வருகிறார் எனவும் அவர் தெரிவித்தார். வேலுமணிக்கு ஆதரவாக உள்ள காவல் துறை அதிகாரிகள் லிஸ்ட் எனது கையில் உள்ளதாகவும், ஆட்சிக்கு வந்ததும் தவறு செய்யும் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஸ்மார்ட் சிட்டியில் பல்லாயிரம் கோடி ஊழல் செய்தவர் வேலுமணி எனவும், பாஜகவிற்கு பயந்து ஓட்டு போட்டு சிஏஏவை கொண்டு வந்தது அதிமுக எனவும் அவர் தெரிவித்தார். மாதிரி முதலமைச்சர் போல வேலுமணி உள்ளார் எனவும், வேலுமணியை வீழ்த்த உதயசூரியனுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும். வேறு யாருக்காவது ஓட்டுப் போட்டால், வேலுமணிக்கு ஓட்டு போட்டது போல தான் எனவும் அவர் தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் 200 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர் எனவும், திமுக ஆட்சியில் விசாரணை நடத்தி தண்டனை பெற்று தருவோம் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் காப்பி எடுத்து அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது எனவும், கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை நீட் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை எனவும், திமுக ஆட்சியில் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் முனைப்போடு செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுமென்ற அடுத்த நாளே, முதலமைச்சர் 1500 ரூபாய் என அறிவித்தார் எனக் கூறிய அவர், பத்து வருடமாக ஏன் செயல்படுத்தும் எண்ணம் வரவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

இரண்டாம் கட்ட கொரோனா பரவுவதால் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் எனவும், திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரணம் 4 ஆயிரம் ரூபாய் ஜீன் 3 ம் தேதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இது திராவிட மண். எவனும் நெருங்க முடியாது எனவும், மோடி மஸ்தான் வேலை இங்கு பலிக்காது எனவும் கூறிய அவர், இது தமிழகத்தின் சுயமரியாதைக்கு நடத்தப்படும் தேர்தல் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு ஆதரவாக ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பொதுமக்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் வாக்கு சேகரித்தார்.

மேலும் படிக்க