• Download mobile app
08 Jul 2020, WednesdayEdition - 1610
FLASH NEWS
 • மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – முதல்வர் பழனிசாமி
 • மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி
 • கொரோனா பாதித்தோருக்கு டெக்சாமெதாசோன்: மத்திய அரசு அனுமதி
 • கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு!
 • கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி
 • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1000ஐ கடந்தது..!
 • கொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது..!
 • சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு !
 • கொரோனா தடுப்பு நடவடிக்கை – மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை!
 • நாளை மறுநாள் கோவையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி!
 • தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 • ஜூன் 12ஆம் தேதி முதல் அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
 • தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது
 • ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி
 • ஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை?
 • இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை
 • கடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா !
 • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு
 • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்!
 • ஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு
 • தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு!
 • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வாடிக்கையாளரை மையப்படுத்தும் தொழில்நுட்பப் புதுமைகளை விரைவுபடுத்துவதற்காக Finablr உருவாக்கப்பட்டது

April 27, 2018

Business Wire India

 • டாக்டர் பி.ஆர். ஷெட்டி (Dr. B.R. Shetty), “Finablr” என்ற ஒரு ஹோல்டிங் கம்பெனியை உருவாக்கியுள்ளார். அது அவரது உலகளாவிய நிதிச் சேவை பிராண்டுகளை ஒருங்கிணைக்க விழைகிறது.
 • நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொழில் அனுபவத்துடன் Finablr, நிதிச் சேவைகள் துறையில் வாடிக்கையாளரை மையப்படுத்தும் புதுமைகளை விரைவுபடுத்தவுள்ளது.
 • யூஏஇ எக்ஸ்சேஞ்ச்சின் (UAE Exchange) ஐக்கிய அரபு எமிரேட் அல்லாத செயல்பாடுகளை யூனிமணி” (“Unimoni)” என்று மறுபெயரிட உள்ளதையும் Finablr அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட் தொழிலதிபரும் கொடையாளருமாகிய டாக்டர். பவகுது ரகுராம் ஷெட்டி (Dr. Bavaguthu Raghuram Shetty), “Finablr” என்ற ஒரு புதிய ஹோல்டிங் கம்பெனியை உருவாக்குவதாக அறிவித்தார். அது ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு உட்பட்டு, அவரது நிதிச் சேவை பிராண்டுகளின் உலகளாவிய பிரிவுகளை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கும். இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட Finablr, தன் நெட்வொர்க் முழுவதிலும் உள்ள முன்னணி வகை பிராண்டுகளுக்காக மூலோபாய வழிகாட்டுதலையும் மேற்பார்வையையும் வழங்கும்.

புகைப்படங்கள் மல்டிமீடியா கேலரி உள்ளது: http://www.businesswire.com/cgi-bin/mmg.cgi?eid=51793083&lang=en

Finablr தலைமை அணி (எல்ஆர்): பினய் ஷெட்டி (நிர்வாக இயக்குநர், Finablr), டாக்டர் B.R. ஷெட்டி (நிறுவனர் மற்றும் தலைவர், Finablr) மற்றும் புரொமொத் மங்ஹாத் (நிர்வாக இயக்குனர், Finablr) (புகைப்படம்: AETOSWire)

 

மேலும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முயற்சிகள், தொழில் சுற்றுச்சூழல் ஈடுபாடுகள், முதலீடுகள் மற்றும் சாத்தியமான கையகப்படுத்துதல்கள் ஆகியவற்றின் வாயிலாக வாடிக்கையாளரை மையப்படுத்திய தொழில்நுட்பப் புதுமையை விரைவுபடுத்தி, நிதிச் செயலாக்கம் மற்றும் அதிகாரமளிப்பதை செயல்படுத்துவதற்கும் Finablr முனைகிறது. பன்முகத்தன்மை கொண்ட நெட்வொர்க் என்ற நிலையில், Finablr புதுமையான தொழில்நுட்பம் அடிப்படையிலான மற்றும் சந்தை முன்னணி அனுபவங்களை வழங்குவதற்காக யூஏஇ எக்ஸ்சேஞ்ச் (UAE Exchange), டிராவலெக்ஸ் (Travelex), எக்ஸ்பிரஸ் மணி (Xpress Money), போன்றவை உள்ளிட்ட தன்னுடைய நம்பிக்கைக்குரிய நெட்வொர்க் பிராண்டுகளின் ஒட்டுமொத்த தொழில் நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கும். முழுமையான அனுபவத்தைத் தரும் மேடை என்ற நிலையில், Finablr, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்காகத் தடையில்லாத மற்றும் இணைக்கப்பட்ட அனுபவங்களை வழங்குவதற்கு ஆவண செய்யும்.
 
நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொழில் அனுபவம், 18,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆண்டுதோறும் 150 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் பரிமாற்றத்தைக் கொண்ட Finablr நெட்வொர்க் பிராண்டுகள், வலுவான காலடித் தடத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பெருமை கொள்கின்றன. தன்னுடைய சில்லறை வணிக அங்காடிகள், முகவர்கள் மற்றும் டிஜிட்டல் சேனல்கள் மூலமாக ஒட்டு மொத்தமாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களில் வாழ்வில் அங்கமான Finablr நெட்வொர்க் பிராண்டுகள், 45 நாடுகளில் தன்னுடைய நேரடி வணிகத்திலும், நெட்வொர்க் வாயிலாக 165 நாடுகளிலும் தடம் பதித்துள்ளது. தொழில்நுட்பப் புதுமை மற்றும் ஒருங்கிணைப்பை இணைத்து புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே Finablr நிறுவன வளர்ச்சித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
 
அறிவிப்பின் மீது கருத்து தெரிவித்த Finablr நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.பி.ஆர். ஷெட்டி இவ்வாறு கூறினார்: எதிர்கால வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்வதற்காக, நிதிச் சேவைகள் தொழிலின் பரிணாம வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான எங்களுடைய விருப்பத்தின் காரணமாகவே Finablr தோன்றியது. எங்களது பலம், சேவைகளில் புதுமையையும் சிறப்பையும் பதிவு செய்ததன் வாயிலாக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களிடம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்படுத்திய நம்பிக்கையிலிருந்தே உருவாகியிருக்கிறது. நாங்கள் எங்களது போட்டியாளர்களிடையே முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் செய்துள்ள முதலீடு வாயிலாக, எங்கள் பிராண்டுகளின் பட்டியல் முழுவதும் ஆட்டத்தையே மாற்றும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கொண்டு வருவோம். நாங்கள் எங்கள் வாடிக்lகையாளர்களால் ஊக்கம் பெற்றோம் அத்துடன் ஈடுபாடுமிக்க வாடிக்கையாளர் சமூகத்தை உருவாக்குவதில் Finablr கவனம் செலுத்தும்.
 

பினாய் ஷெட்டி, Finablr செயல் இயக்குநர் இவ்வாறு விளக்கினார்: Finablr, அதன் வாடிக்கையாளர்களை செயல்படச் செய்யவும், அதிகாரமிக்கவர்களாக ஆக்குவதற்கும், நெட்வொர்க் பிராண்டுகள் அனைத்திலும் உள்ள வலிமைகளையும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் உள்ள முதலீடுகளையும் ஒன்று சேர்த்து, நடைமுறைப்படுத்தத்தக்க, விலை குறைந்த வாடிக்கையாளர் முன்மொழிவுகளைக் கட்டமைக்கும். நாங்கள் Finablr எங்களது நெட்வொர்க் கம்பெனிகள் மற்றும் பலதரப்பட்ட சுற்றுச்சூழல் பங்குதாரர்களின் வலிமைகளையும் திறன்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு புதுமையான மேடையாகப் பார்க்கிறோம். இதன் விளைவாக, அனைத்து மக்களிடையேயும், செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தினிடையேயும் முன்னணியில் நிற்கும் திறன்களை நாங்கள் கொண்டு வருகிறோம்.
 
வாடிக்கையாளர்களும் வணிகர்களும் செயல்படும் விதத்தை மாற்றியமைக்கும், புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் அதன் முயற்சிகளின் வழியே, Finablr அதன் உலகளாவிய நெட்வொர்க் முழுவதும் புதுமை மையங்களை (i-Hubs) அமைத்து வருகிறது. இந்தப் புதுமை மையங்கள் தொழிலில் உள்ள சீர்குலைக்கும் போக்குகளைக் கண்டறிந்து, அதன் பிராண்டுகளின் நெட்வொர்க்குகளுக்கு மேம்பட்ட வர்த்தகப் பலன்களை வழங்கக்கூடிய புதுமைகளைச் செயல்படுத்தும். அதனுடைய முதலீட்டு நீட்சியின் வழியாக, Finablrஅதன் போர்ட்ஃபோலியோவை கூடுதல் முயற்சிகள் மூலம் பூர்த்தி செய்யக்கூடிய திறன்களைப் பெறுவதற்கு முனையும். இந்த Finablr முதலீட்டு வழி மூலம், யூஏஇ எக்ஸ்சேஞ்ச் அறிவித்துள்ள மூலோபாய மூலதனங்கள் மற்றும் கையகப்படுத்துதல் திட்டங்கள் (250-300 மில்லியன் அமெரிக்க டாலர்) உள்ளிட்ட அதன் நெட்வொர்க் பிராண்டுகள் சார்பாக கூடுதல் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.
 
புரோமோத் மங்காட், Finablr செயல் இயக்குநர் தொடர்ந்து இவ்வாறு தெரிவித்தார்: "இந்த வகையில் முன்னணியான ஒரு நெட்வொர்க் மற்றும் நம்பிக்கைக்குரிய பிராண்டுகள் என்ற வகையில், Finablr ஒரு தடையற்ற உலகத்திற்காக, நிதிச் சேவைகளின் எதிர்காலத்தை முன்னின்று நடத்துவதற்காக தனித்துவமான இடத்தில் உள்ளது, இந்தப் புதுமையான திட்டத்தைக் கவனத்தில் வைத்துக் கொண்டே, மூலோபாய பங்குதாரர்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற தொழில் விரைவுபடுத்தித் திட்டங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் நாம் நமது பயணத்தைத் தொடங்கியுள்ளோம். புதுமை மையங்கள் தொடக்கமானது, நமது தொழில்நுட்பத்தில் நமது முந்தைய முதலீடுகள் மீது கட்டப்படுகிறது மற்றும் அதி நவீன தீர்வுகளை வழங்குவதில் நமது வேகத்தைத் துரிதப்படுத்துகிறது. மேலும், முதலீட்டு அடிப்படையில், நமது புதிய முயற்சிகளுக்கு உதவி செய்யக்கூடிய வகையில், தொழில் திறனிலோ அல்லது தொழில்நுட்பப் பார்வையிலிருந்தோ, சரியான சந்தர்ப்பத்தை நாம் தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்."
 
யூஏஇ எக்ஸ்சேஞ்ச்சின் ஐக்கிய அரபு எமிரேட் அல்லாத செயல்பாடுகளை யூனிமணி (Unimoni)” என்று மறுபெயரிடும் விருப்பத்தையும் Finablr அறிவித்துள்ளது, “Universal Money” என்பதன் சுருக்கமாகிய, Unimoni, பலதரப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் மற்றும் யூஏஇ எக்ஸ்சேஞ்ச்சின் பாரம்பரியம் மற்றும் பிராண்ட் ஈக்குவிட்டி மீது கட்டமைக்கப்படும்.
 
*ஆதாரம்: AETOSWire
 
தொடர்புகள்:
Finablr
லஹ்சன் ஏட்டர்டா – ஊடக உறவுகள் மேலாளர் +971556611849
[email protected]
 
புகைப்படங்கள் மல்டிமீடியா கேலரி உள்ளது: http://www.businesswire.com/cgi-bin/mmg.cgi?eid=51793083&lang=en  


Source: Businesswire

மேலும் படிக்க