• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோவில்

July 11, 2018 findmytemple.com

சுவாமி:புருஷோத்தமர்.

அம்பாள்:புருஷோத்தம நாயகி.

மூர்த்தி:ராமர்,சீதை,லட்சுமணன்,ஆஞ்சநேயர்.

தீர்த்தம்:திருபாற்கடல்.

தலவிருட்சம்:பலா,வாழைமரம்.

தலச்சிறப்பு:பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 30 வது தலம் ஆகும். இத்தலத்தில் மூலவர் புருஷோத்தமர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி அமர்ந்த திருக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் ராமர்,சீதை,லட்சுமணன்,ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

ஆண்டாள்,நம்மாழ்வார்,உடையவர்,சேனை முதலியார் ஆகியோர் தனி சன்னதியில் காட்சியளிக்கின்றனர்.இத்தலத்தில் மூன்று ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது.அதில் ராமர் சன்னதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்திய நிலையில் அருள்பாலிக்கிறார். வைணவத் திருத்தலங்களில் புருஷோத்தமன் என்ற திருநாமத்தில் இறைவன் அருள்பாலிக்கும் ஒரே தலம் ஆகும்.இத்தல இறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறார்.எனவே இத்தலம் வண்புருடோத்தமம் என அழைக்கப்படுகிறது.

அருகிலுள்ள நகரம்:சீர்காழி.

கோவில் முகவரி:அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோவில், திருவண்புருசோத்தமம்,திருநாங்கூர் – 609 106 (சீர்காழி-திருநாங்கூர்) நாகப்பட்டினம் மாவட்டம்

மேலும் படிக்க