• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில்

September 18, 2018 findmytemple.com

சுவாமி : சங்கமேஸ்வரர்.

அம்பாள் : வேதநாயகி.

தீர்த்தம் : முக்கூடல் தீர்த்தம், காயத்ரி தீர்த்தம்.

தல விருட்சம் : இலந்தைமரம்.

தலச்சிறப்பு :

தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் பவானியும் ஒன்றாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் காயத்ரி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்று பெயர். இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம். இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லையாம். இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது.

காவிரி, பவானி, அமுதநதி என்னும் மூன்று ஆறுகள் கூடும் இடத்தில், புண்ணியதலமாக பொலிவுடன் விளக்குகிறது. வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த “சுயம்புலிங்கமுள்ள” திருத்தலம். இச்சங்கமத்தால் இறைவன் சங்கமஸ்வரர் என பெயர் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. சுவாமி சந்நதிக்கும் அம்மன் சந்நதிக்கும் இடையில் முருகனின் ஆலயம் அமைந்து சோமாஸ்கந்த மூர்த்தியாக தரிசனம் கிடைக்கிறது. ஆலயத்தின் ஆதிகேசவ பெருமாள் மற்றும் சௌந்திரவல்லி தாயார் தனி சன்னதிகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு :

இக்கோவிலின் அம்பிகை வேதநாயகியின் பெருமையை விளக்க வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றும் உள்ளன.

ஒரு முறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.

நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

பூஜை விவரம் : ஆறுகால பூஜைகள்.

திருவிழாக்கள் :

சித்திரைமாதம், சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு “திருத்தேர்விழா”.

சித்திரை மாதம் ஹஸ்தநட்சத்திரத்தில் ஸ்ரீஆதிகேசவபெருமாளுக்கு “திருத்தேர்விழா”.

ஆடி 18,

அமாவாசை,

பிரதோஷம்,

சிவராத்திரி

வைகுண்ட ஏகாதசி விசேஷாமானது.

அருகிலுள்ள நகரம் : ஈரோடு.

கோயில் முகவரி : அருள்மிகு சங்கமேசுவரர் திருக்கோவில்,பவானி – 638 301, ஈரோடு மாவட்டம்.

மேலும் படிக்க