• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இன்னும் என் வாழ்க்கையில் நான் என்ன..என்ன…கேட்கணுமோ: கோலி!

January 13, 2018 tamil.samayam.com

ரகானேவை அணியில் சேர்க்க கூடாது என சொன்ன வேடிக்கை வாய்கள் இன்று அவரை அணியில் சேர்க்க வேண்டும் என சொல்கிறது,’ என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்க சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் எளிய இலக்கை துரத்திய போதும் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இரு அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை செஞ்சுரியனில் துவங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முதல் டெஸ்டில் ரகானேவுக்கு பதிலாக ரோகித் சர்மாவை அணியில் சேர்த்திருக்க கூடாது என அனைவரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் பேசிய கோலி, ரகானே வேணாம் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று அவரை ஏன் சேர்க்கவில்லை என கேள்வி கேட்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

நரம்பில்லாத நாக்கு:

இதுகுறித்து கோலி கூறுகையில்,’ மக்களின் மனநிலை ஐந்துநாட்களுக்குள் எப்படி மாறுகிறது என புரியவில்லை. இதைப்பார்க்கும் போது எனக்கு வேடிக்கையாக உள்ளது. இன்னும் என்ன என்ன கேள்விகளை நான் கேட்க வேண்டுமோ என தெரியவில்லை. ஒரு அணிக்கு சரியான தேர்வே மிகவும் அவசியம். ரகானேவைவிட ரோகித் தற்போது நல்ல பார்மில் உள்ளதால் தான் அவரை தேர்வு செய்தோம் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம். கடந்த ஆண்டுகளில் என்ன நடந்தது பற்றி எனக்கு கவலையில்லை. நாளை முதல் நாங்கள் என்ன செய்யவுள்ளோம் என்பதே முக்கியம்’ என்றார்.

மேலும் படிக்க