• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி

September 12, 2018 தண்டோரா குழு

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 331 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா 292 ரன்னில் ஆல்அவுட் ஆனது.40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இந்நிலையில் இந்தியாவிற்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து,இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் ஒரு ரன்னிலும்,புஜாரா ரன் ஏதும் அடிக்காமலும் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி பிராட் வீசிய 3-வது ஓவரில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.இதனால் இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

பின்னர் லோகேஷ் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் 6வது விக்கெட்டுக்கு 250 ரன்கள் சேர்த்தனர்.இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 149 ரன்களும்,ரிஷப் பந்த் 114 ரன்களும் அடித்தனர்.அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 345 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.சர்வதேச அரங்கில் ரிஷப் பந்த் சதமடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.மேலும்,டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பரில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.

மேலும் படிக்க