• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெஸ்ட் வரலாற்றில் தனது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது வங்கதேச அணி

July 5, 2018 தண்டோரா குழு

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட்,3 ஒரு நாள் மற்றும் 3டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று தொடங்கியது.டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஜேசன் ஹோல்டர்,முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார்

வங்கதேச அணி சார்பில் தமிம் இக்பால்,லிடன் தாஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.அந்த அணி 10 ரன்கள் எடுத்திருந்த போது தமிம் இக்பால் 4 ரன்னில் ரோச் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதேவேகத்தில் அடுத்தடுத்து களமிறங்கியவர்களை,வந்த வேகத்தில் பெவிலியன் திருப்பி அனுப்பினர் ரோச்.

வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார்.இதனால், 18.4 ஓவர்களுக்கு வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுத்து வங்கதேசம் சுருண்டது.வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கிமர் ரோச் 8 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து,5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இதேபோல 11 ரன்களை விட்டுக்கொடுத்து,கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் தனது மோசமான இன்னிங்ஸை வங்கதேச அணி பதிவுசெய்தது.

கடந்த 1974 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 42 ரன்களில் ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க