• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டி 20: 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

July 7, 2018 தண்டோரா குழு

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து – இந்தியா இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும்,ஷிகர் தவானும் களமிறங்கினர்.ரோகித் சர்மா 5 ரன்களிலும்,ஷிகர் தவான் 10 ரன்களிலும்,லோகேஷ் ராகுல் 6 ரன்களிலும் வெளியேறினர்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும்,சுரேஷ் ரெய்னாவும் நிதானமாக ஆடினர்.
கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று விளையாடி 47 ரன்கள் எடுத்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார்.இறுதியில்,இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடி, 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ் 41 பந்தில் 3 சிக்சர்,4 பவுண்டரி உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் 1-1 சமநிலையில் உள்ளது.

மேலும் படிக்க