• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கீப்பிங்கை வைத்து காலத்தை ஓட்டுகிறாரா ‘தல’ தோனி!

February 13, 2018

தோனியின் தனித்துவமான விக்கெட் கீப்பிங் தான் அவருக்கு மிகவும் கைகொடுப்பதாக இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்து முதல் முறையாக வரலாறு படைத்தது.

நான்காவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் ஐந்தாவது ஒருநாள் போட்டி, போர்ட் எலிசபெத்தில் இன்று நடக்கிறது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியின் தோல்விக்கு, சில ரசிகர்கள், தோனியின் ஆமை வேக ஆட்டம் தான் காரணம் என தெரிவித்தனர்.

கைகொடுக்கும் கீப்பிங்:

இந்நிலையில் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், தோனிக்கு அவரது தனித்துவமான கீப்பிங் தான் அதிகம் கைகொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீதர் கூறுகையில், தோனி தனக்கென தனி ஸ்டைலை வைத்துள்ளார். அவர் வழி எப்போதும் தனி வழி. அதற்கு நாம் மகி வழி என நான் பெயர் வைத்துள்ளேன்.

பேட்டிங்கிலும் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் தகுதி படைத்தவர் தோனி. ஆனால் இந்திய அணிக்கு சிறந்த பினிஷர்கள் கட்டாயம் தேவை. இதை உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பெற்றுவிடும் என நினைக்கிறேன். என்றார்.

 

மேலும் படிக்க