• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கை கேப்டனுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை

June 21, 2018 tamilsamayam.com

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியில் விண்டீஸ் வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டி டிரா ஆனது.இந்த தொடரின் 2வது போட்டியின் போது பந்தை விண்டீஸ் அணிக்கு இலங்கை பவுலிங் செய்து கொண்டிருந்த போது,3வது நாள் ஆட்டத்தின் போது பந்து சேதமாகியுள்ளது.புது பந்து கொடுத்தால் தான் விளையாடுவோம் என இலங்கை அணி தெரிவித்தது.இதனால் 2 மணிநேரம் போட்டி பாதிக்கப்பட்டு பின் தொடர்ந்தது.

இந்நிலையில் போட்டி நடுவர்கள் ஆய்வு செய்ததில் சண்டிமல் பந்தை சேதப்படுத்த ஏதோ ஒரு செயற்கை திரவத்தை தடவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து ஐசிசி விதியை மீறிய குற்றத்திற்காக இலங்கை கேப்டன் தினேஷ் சாண்டிமலுக்கு 100% போட்டி சம்ளத்தை அபராதமாகவும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பார்படாசில்,கென்சிங்டன் ஓவலில் நடைப்பெறும் 3வது டெஸ்ட் போட்டியில் சண்டிமல் விளையாடமாட்டார்.

மேலும் படிக்க