• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆஸ்திரேலிய வீரர்கள் என்னை ஓசமா என்று அழைத்தனர் – இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலி

September 15, 2018 தண்டோரா குழு

ஆஸ்திரேலிய வீரர்கள் தன்னை ஓசமா என அழைத்ததாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான மோயின் அலி தெரிவித்தது கிரிக்கெட் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவர் மொயின் அலி. இவர் தற்போது சுய சரிதை புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தில் தான் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மொயின் அலி தனது புத்தகத்தில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கார்டிப் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் நான் பேட் செய்து கொண்டு இருந்த போது, ஆஸ்திரேலிய வீரர்கள் இருவர், என் பக்கமாக திரும்பி, இந்த ஓசாமை சீக்கிரம் அவுட் ஆக்க வேண்டும் என பேசினர். இந்த வார்த்தையை கேட்டு நான் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றேன். இதுநாள் வரை நான் கிரிக்கெட் களத்தில் இப்படி ஒரு கோபம் அடைந்தது இல்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் என்னை இவ்வாறு கூறியது பற்றி சக வீரர்கள் சிலரிடம் கூறினேன். அப்போது சக வீரரான ட்ரெவர் பயலிஸ் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லீமனிடம் இந்த பிரச்சினையை எடுத்துச்சென்றார்.

இதையடுத்து, லீமனும் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களை அழைத்து, நீங்கள் அவ்வாறு அழைத்தீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இதனை மறுத்து நாங்கள் பகுதி நேர பேட்ஸ்மேனை அவுட் ஆக்குமாறு மட்டுமே கூறினோம் என்றனர். இந்த பிரச்சினையால் தொடர் முழுவதும் நான் மன உளைச்சலிலேயே இருந்தேன்” என மோயின் அலி தெரிவித்துள்ளார்.

மொயின் அலியின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான புகாரை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொள்வோம். களத்தில் இதுபோன்ற மோசமான செயல்பாடுகள் நடைபெற்றது என்றால், அதை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். கிரிக்கெட்டில் இது போன்ற கருத்துக்களுக்கு இடம் இல்லை. இந்த பிரச்சினை குறித்து கூடுதல் விவரங்களை பெற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து செயல்படுவோம்” என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க