• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

Windsor Castle லில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச கிரீடத்தின் நகைகள் கண்டுபிடிப்பு

January 13, 2018 தண்டோரா குழு

இரண்டாம் உலகப்போரின்போது, இங்கிலாந்து நாட்டின் அரச பரம்பரையின் கிரீடத்தின் நகைகள், பிஸ்கட் டின்னில் Windsor Castleலில் மறைத்து வைக்கப்பட்டது என்று பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில், பிரிட்டன் நாட்டின் அரச பரம்பரையின் கிரீடத்தின் Black Prince Rubyஉள்ளிட்ட நகைகள், ஜெர்மனி நாட்டின் நாசி படையினர் கையில் சிக்கி கொள்ளக்கூடாது என்று 2 ஆம் ராணிஎலிசபெத்தின் தந்தை அரசர் ஆறாவது ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த நகைகளை ஒரு பிஸ்கட் டின்னில் வைத்து, அவசர காலத்தில் Windsor Castleலில் இருந்து தப்பி செல்ல பயன்படுத்தப்படும் ரகசிய பாதையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டது. இங்கிலாந்தின் Royal Archives ன் அதிகாரி ஆலிவர் உர்க்ஹார்ட் இர்வின் மறைக்கப்படிருந்த நகைகளை கண்டுபிடித்தார். இது குறித்த ஆணவ படத்தை இங்கிலாந்தின் பிபிசி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 14) வெளியிடவுள்ளது.

கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை நடந்த இரண்டாம் உலகப்போரின்போது, பலத்த பாதுகாப்புடன் Windsor Castleலில் ஒழிந்திருந்த இரண்டாம் ராணி எலிசபெத்துக்கு இந்த ரகசியம் தெரியவில்லை.

“அரச நூலகத்தின் நூலகர் ஓவன் மோர்ஹெடிடம் இருந்து அரசர் ஆறாவது ஜார்ஜின் தாயார் அரசி மேரிக்கு எழுதிய கடிதங்கள் மூலம், பூமிக்கு கீழ் எப்படி துளை தோண்டப்பட்டது என்றும் எக்கு கதவுகளை கொண்ட அறைகள் எப்படி உருவாக்கப்பட்டது என்ற உண்மை தெரியவந்தது” என்று அந்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார். கடந்த 1937ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டின் அரசராக மூடிசூடப்பட்ட அரசர் ஜார்ஜயின் கிரீடத்தில் 17 நீல வைர கற்கள், 11 மரகத கற்கள், நூற்றுக்கணக்கான முத்துகள் உள்ளிட்ட சுமார் 2, 868 வைரங்களை கொண்டிருந்தது. கடந்த 1415ம் ஆண்டு நடந்த அகின்கொர்ட் போரின்போது, அரசர் ஐந்தாம் ஹென்றி, தனது தலைகவசத்தில் அணிந்திருந்த Black Prince Rubyயும் அதில் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க