• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டுவிட்டரில் விரைவில் எடிட் செய்யும் வசதி அறிமுகம் !

November 13, 2018 தண்டோரா குழு

செய்திகள் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளங்களில் பேஸ்புக்கும்,ட்விட்டரும் முன்னணியில் இருக்கின்றன.பல்வேறு செய்திகளும் உடனக்குடன் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி விடுகிறது.இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி கடந்த 9ம் தேதி இந்தியா வந்தார். அவரின் முதல் இந்தியப் பயணத்தின் முக்கிய பகுதியாக டெல்லி ஐ.ஐ.டி-யில் மாணவர்களிடையே நேற்று உரையாற்றினார்.

இவ்விழாவில் பேசிய ஜாக் டோர்சி,ட்விட்களை எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலினை செய்யப்படுவதாகவும் ட்வீட்டுகளை எடிட் செய்யும் அம்சத்தை பலரும் வீணடிக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காக ட்விட்களை எடிட் செய்யும் வசதி கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும்,மக்கள் ட்விட்டர் சேவையில் பிரச்சனையாக பார்ப்பதை நீக்கிவிட்டு,அதை சரி செய்யும் முயற்சிகளை நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து,அதை சரியாக வழங்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது.நாங்கள் உருவாக்கி வரும் அம்சம் பொது வெளியில் இருந்து எதையும் நேரடியாக எடுத்துவிடவோ அல்லது திசைத்திருப்பும் வகையிலோ இருக்காது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க