• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதல்முறையாக சபரிமலை நடைதிறப்பு

October 17, 2018 தண்டோரா குழு

பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு முதல்முறையாக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரள அரசு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இதற்கிடையில்,ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்க இருப்பதால் இதில் கலந்துகொள்ள வரும் பெண் பக்தர்களுக்கு எந்த தீங்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக கேரள காவல்துறை 1500 போலீஸார்களை பாதுகாப்பிற்காக சபரிமலையில் குவித்தனர்.

இதையடுத்து,சபரிமலை பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில்,நேற்று கூடிய ஐயப்ப பக்தர்கள், அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்தி நிறுகின்றனர்.இதனால்,அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.எனினும் சபரிமலைக்கு வரும் பெண்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு முதல்முறையாக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது.கோவிலின் தலைமைத் தற்திரி கண்டராரு ராஜீவரு பூஜைகள் மேற்கொள்கிறார்.வருகிற 22–ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க