• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறந்த மகனைத் தோளில் சுமந்து சென்ற தந்தை

August 30, 2016 தண்டோரா குழு

இறந்து போன மகனின் சடலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற அவலம் மீண்டும் வட இந்தியாவில் நடந்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் சுனில்குமார்.இவரது 12 வயது மகன் ஆன்ஷ் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டான்.

வீட்டருகே இருந்த மருத்துவமனையில் முதலில் மகனைச் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார் சுனில் குமார்.ஆனால் காய்ச்சல் குறைந்தபாடில்லை.இதையடுத்து நேற்று காலை சுனில்குமார் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு மகனைத் தோளில் சுமந்தவரே நடந்தே அவர் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கிருந்த மருத்துவர்களோ சிகிச்சையளிக்க மறுத்து,அருகில் உள்ள சிறுவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.தன் மகனுக்கு ஆரம்ப கட்ட சிகிச்சையாவது அளிக்குமாறு சுனில்குமார் கெஞ்சியுள்ளார்.

ஆனால் மருத்துவர்கள் மறுத்து விட்டனர் அதோடு ஸ்ட்ரெச்சரும் தரப்படவில்லை.வேறு வழியில்லாமல் மகனைத் தூக்கிக் கொண்டு குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.ஆனால்,அதற்குள் ஆன்ஷ்,தந்தையின் தோளிலேயே இறந்து விட்டார்.இச்சம்பவம் குறித்து சுனில் குமார் கூறுகையில்,எனது மகன் 6ம் வகுப்பு படித்து வந்தான்.நன்றாகப் படிப்பான்.

அவன் காய்ச்சலால் அவதிப்பட்ட போது அவனைத் தோளில் சுமந்தவாறே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன்.நான் எனது மகனைத் தோளில் போட்டுக் கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களைக் கெஞ்சினேன்.சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகே அவனைப் பார்த்தனர்.

பின்னர் அவனைக் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறினர்.அதற்குள் என் மகன் எனது தோளிலேயே இறந்து விட்டான்.எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கண்ணீரோடு கூறினார்.

இதைத் தொடர்ந்து,சுனில் குமார் உயிரிழந்த மகனின் சடலத்தை தன் தோளில் போட்டுக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.ஆம்புலன்ஸ் வசதியும் அவருக்குச் செய்து கொடுக்கப்படவில்லை.மேலும் சில தினங்களுக்கு முன் ஒடிசாவில் மஜ்கி என்பவர் தனது மனைவியின் சடலத்துடன் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவு நடந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,உத்தரபிரதேசத்தில் நடந்துள்ள மேலும் ஒரு அவலம் இது.

மேலும் படிக்க