• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அம்மா இல்லாமல் ரொம்ப குளிர் விட்டுப்போச்சு சர்கார் படம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

November 8, 2018 தண்டோரா குழு

அம்மா இல்லாமல் ரொம்ப குளிர் விட்டுப்போச்சு என சர்கார் படம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

வீரமாமுனிவரின் 338வது பிறந்தநாள்,தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி,சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள,அவரது திருஉருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார்,மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

திரைப்படம் எடுப்பவர்கள்,குறிப்பாக நடிகர்களுக்கு இப்போ ஒரு ஃபேஷன் உள்ளது.’அம்மா’ இல்லாமல் ரொம்ப குளிர் விட்டுப்போச்சு.’அம்மா’ இருக்கும்போது இப்படி ஏதாவது ஒரு படத்தில் கருத்து வந்ததா?,’அம்மா’ இருக்கும் போது இப்படி படம் எடுத்திருந்தால் இவர்கள் வீரத்தை மெய்ச்சியிருப்போம்.ஆனால் இப்போது,கோழைகளை போல திரைப்படங்களில் காட்டுகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் முதல்வராக ஆசை இருக்கும்.அதற்காக முதல்வர் போல திரைப்படத்தில் வேடமிடுவார்கள். ஆனால் அதை ஏற்பார்களா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.அதற்கான கொள்கைகளை வெளிப்படுத்துவது என்றால் ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால்,தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை மிதித்து,அவர்களுடைய சிந்தனைகளை திணித்து,தமிழ் மக்களின் உணர்வுகளை அழித்து தன்னை முன்னிலைப்படுத்த கூடிய செயல் என்றால் அந்த செயலை நிச்சயமாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சி.வி. சண்முகம் கூறியதை போல ஒரு திரைப்படம் என்பது நல்ல கருத்துகளை தெரிவிப்பதாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் எம்ஜிஆரின் திரைப்படங்கள் எல்லாம் இருந்தது.அவர் படத்திற்கு இது போன்ற எதாவது ஒரு விமர்சனம் வந்திருக்கிறதா.இன்று இல்லை,நேற்று இல்லை,உலகம் உள்ளவரை போற்றக்கூடிய ஒரு தலைவர் என்றால் அது எம்ஜிஆர் தான்.

இவர்கள் தலைகீழாக நின்றாலும்,அழுது புரண்டாலும்,தலைவரை போன்ற அங்கீகாரத்தை மக்கள் கொடுக்கமாட்டார்கள்.மற்றவர்கள் உணர்வுகளை நீங்கள் புண்படுத்தாதீர்கள்.பிறர் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் திரைப்பட குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.ஜெயலலிதாவிற்கு ஒருவர் வைத்த பெயரை படத்தில் பயன்படுத்தியுள்ளது சரியில்லை.அதில் உள்நோக்கம் உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் படிக்க