• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு

November 21, 2017 தண்டோரா குழு

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.

ஐ.நா பொதுசபையில் உள்ள 193 உறுப்பு நாடுகள் மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் வாக்களித்து நீதிபதிகளை தேர்வு செய்யும்.இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் பிரேசில்,லெபனான்,பிரான்ஸ்,சோமாலியா நாடுகளிலிருந்து தலா ஒரு நீதிபதி தேர்வு செய்யப்பட்டனர்.இதனையடுத்து மீதமுள்ள ஒரு நீதிபதிக்கு இந்தியாவைச் சேர்ந்த தல்வீர் பண்டாரியும் இங்கிலாந்தை சேர்ந்த கிரீன் உட்டும் போட்டியிட்டனர்.

இந்நிலையில்,ஐ.நா. பொதுச்சபையும், பாதுகாப்பு சபையும் நேற்று கூடியது. நீதிபதிக்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரீன் உட், நீதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இதையடுத்து, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்க