• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் 100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

January 12, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் 100வது செயற்கைக்கோளான பி.எஸ்.எல்.வி. சி-40 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோ தயாரித்த ஐஆர்என்எஸ்எஸ் 1எச் என்ற செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி39 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனால், சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்தபின் செயற்கைக்கோள் ராக்கெட்டை விட்டு வெளியேறவில்லை. வெப்ப பாதுகாப்பு தகடு பிரிவதில் கோளாறு ஏற்பட்டதால் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், நீண்ட நாட்களாக பிஎஸ்எல்வி ராக்கெட் ஏதும் விண்ணுக்கு அனுப்பப்படாமல் இருந்தது. இதையடுத்து, இஸ்ரோ தயாரித்துள்ள 100வது செயற்கைகோள் உள்பட மொத்தம் 31 செயற்கைகோள்களை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி சி40 ராக்கெட், இன்று காலை 9.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இதற்கான கவுன்ட் டவுன் நேற்று அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது.

ராக்கெட் பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்டில் மொத்தம் 31 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டது. இதில் 28 செயற்கைகோள்கள் அமெரிக்கா, பின்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சொந்தமானவை. 3 செயற்கைகோள்கள் இந்தியாவிற்கு சொந்தமானவை. மேலும், இந்தியாவிற்கு சொந்தமான 3 செயற்கைகோள்களில் புவியை கண்காணிக்கும் 710 கிலோ எடைகொண்ட கார்டோசாட்2 வரிசை செயற்கைகோளும் ஏவப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் 710 கிலோ எடை கொண்ட கார்டோசாட்-2 செயற்கைக்கோள், 100 கிலோ எடை கொண்ட மைக்ரோ சாட்டிலைட் மற்றும் 5 கிலோ எடை கொண்ட மிகச் சிறிய நானோ செயற்கைக் கோள்ளாகும்.

கார்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோள் எல்லைப் பகுதியைக் கண்காணிப்பதற்கும், சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான துல்லியமான தகவல்கள், அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளில் டாங்குகள் உள்ளிட்டவற்றின் நடமாட்டம் போன்ற தகவல்களை அறிய உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர். பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் சுமந்து செல்லும் 31 செயற்கைகோள்களில் இஸ்ரோ தயாரித்த 100வது செயற்கைகோளும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி பிஎஸ்எல்வி சி-6 ராக்கெட்டில் முதல் கார்டோ சாட்-1 செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதையடுத்து பிஎஸ்எல்வி சி-7, பிஎஸ்எல்வி சி-9, பிஎஸ்எல்வி சி-15, பிஎஸ்எல்வி சி-34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்டோசாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுவாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணி 20 முதல் 25 நிமிடங்களில் முடிந்துவிடும். இன்று விண்ணில் செலுத்தியுள்ள பிஎஸ்எல்வி சி40 ராக்கெட், அது எடுத்து செல்லும் செயற்கைகோள்களை சுற்றுவட்டார பாதையில் நிலை நிறுத்த ஏதுவாக சுமார் 2 மணி நேரம் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 4 எரிபொருள் நிலைகளை கொண்ட இந்த பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்டை ஏவ ஏறத்தாழ இரண்டு முறை அதன் இயக்கத்தை நிறுத்தி வைத்து மீண்டும் விண்ணில் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. ராக்கெட் புறப்பட்ட நிமிடம் 21 வினாடிகளில் 4ம் நிலையில் உள்ள எஞ்சின் இயக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 16 நிமிடம் 36 வினாடிகளில் ராக்கெட்டின் 4ம் நிலை எஞ்சின் நிறுத்தப்பட்டு கார்டோசாட் 2 விடுவிக்கப்பட்டு முதல் சுற்றுவட்டார பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

இந்த பணிகள் முடிந்த 42வது நிமிடத்தில் வெளிநாடுகளின் 28 செயற்கைகோள்கள் மற்றும் ஒரு நானோ செயற்கைகோள் ஆகியவை அதே முதல் சுற்றுவட்டார பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு பிறகு நிறுத்தப்பட்ட ராக்கெட்டின் இயக்கம் மீண்டும் தொடங்கும். ராக்கெட்டின் 4ம் நிலையில் உள்ள எஞ்சினின் இயக்கம் 2 முறை நிறுத்தப்பட்டு இயக்கப்படும். அடுத்த 45வது நிமிடத்தில் 2வது சுற்றுவட்டார பாதையில் பயணிக்க தொடங்கும். ராக்கெட் ஏவப்பட்ட சுமார் 1 மணி 45 நிமிடங்களில் மிகச்சிறிய மிகச்சிறிய செயற்கைக்கோளான மைக்ரோசாட் 2வது சுற்றுவட்டார பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க