• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கை அகதிகள் முகாமில் நான்கு பேருக்கு கத்தி குத்து

November 21, 2017

கோவை இக்கரை பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேருக்கு கத்தி குத்து.

கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இக்கரை பூலுவபட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.இங்கு 25 வருடங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடேசனின் மகன் ஜான் என்கிற ஐவன் (27) என்பவர் எந்த பணிக்கும் செல்லாமல் சும்மா இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் ஜான் மற்றும் அவரது நண்பர் ரகுவரன் (32) உட்பட நான்கு பேர் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ஆடு கட்ட வந்த ரகுவரனின் அப்பா பீதாம்பரத்தை (51) ஜான் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தந்தைக்கு ஆதரவாக ரகுவரன், ஜானை திட்டியுள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ரகுவரனின் மச்சானும் சாந்தரூபனும் (22)ஜானை கண்டித்ததாக தெரிகிறது.

ஜானுக்கும் மற்றவர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. அருகில் இருந்தவர்கள் ஜானையும் , மற்றவர்களையும் பிரித்து விட்டனர். குடிபோதையில் இருந்த ஜான் நேராக வீட்டுக்குச்சென்று கத்தி எடுத்து வந்து பீதாம்பரம், ரகுவரன் மற்றும் சாந்தரூபனை கத்தியால் குத்தியுள்ளார். ஜான் கத்தியால் குத்துவதை பார்த்த அருகில் இருந்து வந்த ரேகா , தடுக்க முற்பட்டபோது அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

குத்தப்பட்ட பீதாம்பரம், ரகுவரன், சாந்தரூபன் உட்பட்ட மூன்று பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரேகா அருகிலிருந்த மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஜானை தேடிவருகின்றனர்.ஏற்கனவே இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் ஜானை கைது செய்யக்கோரி அகதிகள் முகாமிலுள்ள மக்கள் காவல்துறையினரிடம் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க