• Download mobile app
17 Nov 2018, SaturdayEdition - 1011
FLASH NEWS
  • தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்
  • கஜா புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் – முதல்வர் பழனிசாமி
  • கஜா புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
  • புயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – முதல்வர் பழனிசாமி
  • கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்வு

கோவை சாந்தி தியேட்டர் முன் சர்கார் பேனர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம்

November 8, 2018 தண்டோரா குழு

கோவையில் சாந்தி திரையரங்கின் முன் வைக்கப்பட்டுள்ள சர்கார் படத்தின் பேனர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப் பட்டுள்ளதாகவும் அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் மற்றும் அதிமுகவின் திட்டங்கள் குறித்தும்,அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் சர்கார் திரைப்படம் வெளியான சாந்தி தியேட்டரை 30க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரையரங்கின் முன் வைக்கப்பட்டுள்ள சர்கார் படத்தின் பேனர்களை கிழித்த அதிமுகவினர் சர்கார் படத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க