• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு

September 21, 2018

கோவையில் நேரு விளையாட்டு அரங்கின் அருகில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்ட விற்பனை நிலையத்தை உள்ளாட்சிதுறை அமைச்சர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் சிறப்பாக வழி நடத்துகின்றனர்.கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி பணிகளை செய்து வருவதாகவும்,கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தங்கமழை பரிசு திட்டத்தின் கீழ் 3 பேருக்கு 8 கிராம் தங்ககாசும்,8 பேருக்கு 4 கிராம் தங்க காசும் வழங்கப்பட்டதாகவும்,கோ ஆப்டெக்ஸ் கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும்,நஷ்டத்தில் இருந்த கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் அதிமுக ஆட்சியில் இலாபத்தில் இயங்கி வருவதாகவும்,கடந்தாண்டு 316 கோடி விற்பனை செய்து சாதனை படைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.கைத்தறி பொருட்களை பயன்படுத்துவதால் நெசவாளர் வாழ்வு மேம்படும்.அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் வரை 30 சதவீதம் தள்ளுபடியில் துணிகள் விற்கப்படும்” இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க