• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்து முன்னணியை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்

October 1, 2016 தண்டோரா குழு

கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கடந்த 22ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். அவரது உடல் கோவை துடியலூர் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

ஊர்வலமாக வந்த போழுது துடியலூர் பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இதில் போலீஸ் வாகனம், 2 கடைகள் எரிக்கப்பட்டது மற்றும் பல கடைகள் மர்ம கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக 500க்கும் மேற்பட்றோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை செய்தியாளர் மன்றத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்றது .அதில் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர் பேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் ,

சசிகுமார் கொலையை தொடர்ந்து கோவையில் இருக்கும் முஸ்லீம்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டன. சுமார் 5 கோடி அளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் முழுமையாக கைது செய்யவில்லை. தொடர்ந்து பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்
நடைபெற்று வருகிறது. வன்முறைக்கு காரணமான இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க