• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு ரஜினி சொன்ன சர்ச்சைக்குரிய பதில்

November 12, 2018 தண்டோரா குழு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் சொன்ன பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய முறை தவறாக உள்ளது.பணமதிப்பிழப்பு நீக்கத்தை சரியாக செயல்படுத்தவில்லை.அதை அமல்படுத்திய விதம் தவறு.அதைப்பற்றி விரிவாக பேச வேண்டியுள்ளது.தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க எடுக்கப்படும் முயற்சி பற்றி கேள்விக்கு,அந்தளவுக்கு பாஜக ஆபத்தான கட்சியா?பலர் பாஜகவை ஆபத்தான கட்சி என்று நினைக்கிறார்கள்.பலர் அப்படி நினைத்தால்,கண்டிப்பாக பாஜக அப்படிப்பட்ட கட்சியாகத்தான் இருக்கும்.சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்றி உடனடியாக அமல்படுத்த வேண்டியது அவசியம்.

மேலும்,செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு சார்பில் எழுபட்ட கடிதம் பற்றி கேள்வி கேட்கும் பொழுது “எந்த ஏழு” பேர் என ரஜினிகாந்த் பதிலளித்தார்.அதன்பிறகு செய்தியாளர்கள் ராஜீவ்காந்தி கொலை வழக்கு பற்றி எடுத்து கூறியும் அவர் எனக்கு தெரியாது.தற்போது தான் இது குறித்து கேள்விபடுகிறேன்.இவ்விகாரம் பற்றி வேறொரு சந்தர்பத்தில் கருத்து தெரிவிக்கிறேன் எனக் கூறினார்.இந்நிலையில்,ரஜினிகாந்தின் இந்த பேச்சு தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க