• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வறட்சிக் காலத்தில் விவசாய நிலங்களை பாதுகாக்க பண்ணைக் குட்டைகள் அமைப்பு

August 19, 2017 தண்டோரா குழு

பண்ணைக் குட்டைகள் அமைப்பதால் வறட்சிக் காலங்களில் விவசாய நிலங்களில் பயிர்களைக் காத்திட பயன்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“பண்ணைக் குட்டை என்பது நிலத்தில் மழைநீரை சேமித்து பிற்காலத்தில் அதனை பயன்படுத்துவதே ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

விவசாயின் நிலப்பரப்பு, மண்ணின் தன்மை, தண்ணீர் தேவை, குட்டையை அமைப்பதற்கான செலவு ஆகிவற்றைப் பொறுத்துப் பண்ணைக் குட்டையின் அளவு மற்றும் ஆழம் நிர்ணயம் செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்கள், பயனாளிகளின் தேர்வு ஆகியவை வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் நில ஆவணங்களை சரிபார்த்து, ஒப்புதல் பெற்று தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஒரு பயனாளியின் நிலத்தில் அதிக பட்சமாக ரூ.1.50 இலட்சம் வரை நில மேம்பாடு பணிகள் மேற்கொள்ளலாம். குறைந்த பட்சமாக 15 மீ ஒ 15மீ முதல் அதிகபட்சமாக 25மீ ஒ 25மீ அளவில் நிலத்தின் அளவு மற்றும் வடிவத்திற்கேற்ப பண்ணைக் குட்டைகள் அமைக்கலாம்.

இந்த பண்ணைக் குட்டைகள் அமைப்பதால் வறட்சிக் காலங்களில் விவசாய நிலங்களில் பயிர்களைக் காத்திட பயன்படுகிறது. கால்நடைகளின் சுகாதாரமான பராமரிப்பு மற்றும் அவற்றின் குடிநீர் உபயோகத்திற்கும் இது பயன்படுகிறது.

மேலும் மழைநீர் விரையமாகாமல் நிலத்தடி நீர் சேமிக்கும் அமைப்பாக செயல்படுகிறது. மீன்வளத்தைப் பெருக்குதல், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் அருகிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகளின் நீர்மட்டம் உயர்கிறது.

அதே போல் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு விவசாய வேலையில்லாத காலங்களில் மீன்வளர்ப்புத் தொழில் மூலம் இதர வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பண்ணைக்குட்டையின் கரைகளில் பழ மரங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்வதால் விவசாயிக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அரிய சத்தான உணவும் கிடைக்கிறது. பயிர் சாகுபடியில் செய்ய வேண்டிய வேலைகளை சரியான பருவத்திலும் நேரத்திலும் செய்வதால் விவசாயிகளின் தன்னம்பிக்கை அளவு அதிகரிக்கிறது.”

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க