• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வனவிலங்குகளை கண்காணிக்க டிரோன்ஸ்கள் அறிமுகமாகிறது!…..

November 24, 2017 தண்டோரா குழு

வனவிலங்குகளை கண்காணிக்கவும், மனித-விலங்கு மோதல்களையும், விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும் தமிழ்நாடு வனத்துறை டிரோன்ஸ்களை பயன்படுத்தவுள்ளனர்.

தேசிய புலிகளின் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மற்றும் இந்தியாவின் வனவிலங்கு நிறுவனம் (WII) தேர்ந்தெடுக்கப்பட்ட காடுகளில் டிரோன்ஸை பயன்படுத்துவதற்கான திட்டத்தை சுற்றுச்சூழல், வனப்பகுதி மற்றும் காலநிலை மாற்றதிற்கான மத்திய அமைச்சகம்((MoEF) சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது.

காட்டுப்பகுதிகளில் விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டு தீயை தடுக்கவும், மத்திய அரசு தமிழக அரசுக்கு “5” டிரோன்ஸ்களை வழங்கியுள்ளது.

வனவிலங்குகளை கண்காணிக்வும் மற்றும் ஆய்வு செய்வதற்காகவும், பரந்த வனப்பகுதி மீது இந்த டிரோன்ஸ்களை உபயோகிக்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் விமானநிலைய அதிகாரசபை உட்பட மத்திய அரசுகளிடமிருந்து தேவையான அனுமதியை மாநில அரசு கோரியுள்ளது.

வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டைக்காரர்களை வேட்டையாடுவதை தடுக்க, தற்போது, பழங்குடி மக்களை பணியமர்த்தபட்டுள்ளனர். சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டுவதையும், ஒதுக்கப்பட்ட காடுகளில் ஆக்கிரமிப்பையும் தடுக்க இந்த கருவி உபயோகமாக இருக்கும்.இந்த டிரோங்களை இரவும் பகலும் பயன்படுத்தமுடியும். தற்போது ஓசூர், கூடலூர், கோயம்புத்தூர், கொடைக்கானல், மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள காடுகளில் டிரோங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த டிரோங்கள் ஏற்படுத்தும் சத்தம், யானைகளை மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு திருப்பி அனுப்பும் திறன் கொண்டது.

டிரோங்களில் இருந்து எழும்பும் சத்தமானது, தேனீகள் எழுப்பும் சத்தம் போல் இருப்பதால், அது காட்டு விலங்குகளை விரட்டுகின்றன. யானைகளை மனித இடையூறு இல்லாமல் காடுகளுக்கு அனுப்ப, இந்த தொழில்நுட்பம் ஆப்பிரிக்க காடுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

டிரோன்ஸ் மூலம் தீவிரமாக கண்காணித்தால் காட்டு விலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, காடுகளில் வேட்டையாடுபவர்களை வனத்துறை ஊழியர்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். ஆனால், டிரோன்ஸ் மூலம் இந்த பணி செய்ய மிகவும் எளிதாக இருக்கும்.

மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும், ஆளில்லா விமானம்UAV) சுமார் 100 மீட்டர் உயரத்தை எட்ட முடியும். ஒவ்வொரு இடத்திலும் 2-3 டிரோங்கள் பயன்படுத்தப்படுகின்றன. டிரோங்களை பயன்படுத்தும் பயிற்சியை பெறும் வனத்துறை அதிகாரிகள் தங்கள் தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்துவார்கள். டிரோன் இயந்திரங்களின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் வனவியல் புவியியலின்படி தயாரிக்கப்பட்டுள்ளது.

வனதுறை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, விரைவில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மற்ற காடுகளில் இந்த தொழில்நுட்பம் விரைவில் மேம்படுத்தப்படும். இந்த தொழில்நுட்ப தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் விரிவுப்படுத்துவதற்காக தமிழ்நாடு வனத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், டிரோன்ஸ்களை பயன்படுத்த, வனத்துறை ஊழியர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க