• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மோடிக்கு எதிராக கை விரலை நீட்டினால், அதனை வெட்ட வேண்டும்– பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

November 21, 2017 தண்டோரா குழு

பிரதமர் மோடிக்கு எதிராக கை அல்லது விரலை நீட்டினால், அதனை வெட்ட வேண்டும் என பா.ஜ.க எம்பி கூறியுள்ளது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவில் நேற்று துணை முதல்வர் சுஷில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் பீஹார் மாநில பா.ஜ., மூத்த தலைவரும், உஜியார்ப்பூர் தொகுதி எம்.பி.,யுமான நித்யானந்த் ராய் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

ஏழை குடும்பத்தில் பிறந்து தனது கடுமையான உழைப்பினால் நாட்டிற்கு பிரதமாராகியுள்ளார் மோடி. இதற்கு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். ஆனால், பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது கை அல்லது விரலை நீட்டினால், நாம் இணைந்து அதனை உடைக்க வேண்டும்; அல்லது வெட்ட வேண்டும். அதைபோல் எனது கருத்தை தேச விரோதிகளும், ஏழைகளுக்கு எதிரானவர்களும் தான் எதிர்ப்பார்கள்.ஏழைகளை காப்பவராக பிரதமர் உள்ளார். பிரதமர் ஊழல், வறுமை, கறுப்பு பணம் ஆகியவற்றை ஒழித்துள்ளார். பாஜக தவிர வேறு எந்த சக்திகளுக்கும் நாட்டில் இடமில்லை,
இவ்வாறு அவர் பேசினார்.அவரின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

மேலும் படிக்க